Tuesday, January 3, 2012

ஆற்றல் தந்த விமானப்பயணம்

எமக்கு  சிறுவயதாய் இருக்கும் போது எமது வீட்டிற்கு மேலால் இராணுவத்தினரின் உலங்கு வானூர்த்தி, மிக்-27, கிபீர், சுப்ப சொனிக், சி பிளேன் போன்றவை பறந்து செல்லும் அப்போது நான் வெளியே ஒடி வந்து பார்ப்பதுண்டு. சிறு வயதிலிருந்து விமானத்தில் ஏற வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. ஆனால் அவையெல்லாம் ஆசையிலேயே முடிந்து விடும் என நான் நினைத்தேன்.
ஆனால் 17.10.2011 அன்று யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் இந்தியா செல்வதற்கு விமானத்தில் ஏற எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இப்படியான ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நான் நான் கனவில் கூட நினைக்கவில்லை. எனது ஆசை நிறைவேறிய நாள். விமான நிலையத்தை நான் திரைப்படத்தில் தான் பார்த்தேன். இன்று நேரில் விமான நிலையத்திற்கு போனது எனக்கு புது அனுபவமாக இருந்தது.
எனது பொதியை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு போனதும் எனக்கு முதல் தடவையாக இருந்தன. விமான நிலையத்தில் எப்படி செயற்பட வேண்டும் அதாவது விமான நிலையத்தில் லையினில் நின்று பொதியை சோதனை செய்து பின் படிவத்தை நிரப்பி போவது எல்லாம் எனக்க புது அனுபவமாக இருந்தன.
எனக்கு நகரும் படிக்கட்டில் ஏறி பழக்கமில்லை. இது தான் முதல் தடவையாக இருந்தன.  நகரும் படிக்கட்டில் ஏறியவுடன் வந்து சேருமிடத்தில் நான் தொப்பென விழுந்து விட்டேன். இது எனக்கு மறக்க முடியாத சம்பவமாக இருந்தது.
விமான நிலையத்தின் மேல் மாடிக்கு போய் அங்கு கண்ணாடி யன்னலால் வெளியில் நிற்கும் விமானத்தைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இப்படி பக்கத்திலிருந்து நான் விமானத்தை நேரில் பார்ப்பேன் என நினைக்கவில்லை. நிமானத்தில் ஏறும் போது வாசலில் நின்ற விமானப்பணிவிடைப் பெண்கள் எங்களைப் பார்த்து வணக்கம் சொன்னார். சினிமாவில் இப்படிப்பட்ட காட்சிகளை பார்த்த எனக்கு அவர்களை நேரில் பார்த்தவுடன் இது கனவா என்ற நிலை தோன்றியது.
விமானத்திற்குள் எனது இருக்கையில் இடுப்புப்பட்டியை எப்படி போடுவது என்று எனக்கு தெரியாது. பக்கத்தில் உள்ளவர் போடுவதை பார்த்து தான் நான் இடுப்புப்பட்டியைப் போட்டேன். விமானப்பணிவிடைப் பெண் ஒருவர் விமானப் பாதுகாப்பு கவசம் எப்படி போடுவது என்பதை எமக்கு செய்து காட்டினார். அப்போது நான் சிறுவயதில் படிக்கும் போது ஆசிரியர் விமானத்தில் பயணிக்கும் போது விமான கவசம் பற்றி படிப்பித்த ஞாபகம் தான் வந்தது. பின் விமானம் புறப்படப் போகுது என விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த இலத்திரனியல் கருவிகள் அறிவுறுத்தல்கள் காட்டியது. என்ன இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம் என அவ்விலத்திரனியல் கருவிகள் காடடிக் கொண்டிருந்தன. இதுவும் எனக்கு புது அனுபவமாகும்.
வுpமானம் மேல் எழும்பும் போது எனது நெஞ்சுக்குள் குளிர்மையான உணர்வு ஏற்பட்டது. காதெல்லாம் அடைந்து போய்விட்டது. நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனால் எனது நண்பிகள் சாதாரணமாகவே இருந்தார்கள் அதனை பார்த்து நானும் சாதாரணமாக இருக்க நினைத்தேன்.
இதை விட கொடுமை என்னவென்றால் அங்கு பணிபுரியும் பெண்கள் அப்பிள் சாறை குடிபானமாக தந்தார்கள் ஆனால் நான் அதனை சாராயம் என நினைத்து அருந்தவில்லை. இது எனக்கு மறக்கமுடியாத ஒரு அனுபவமாகும்.
வுpமானத்தை விட்டு இறங்கும் போது விமானம் ஆடி அசைந்து பெரிய சத்தத்துடன் இறங்கின. இவ்வாறு விமானப் பயணத்தில் அனைத்து செயற்பாடுமே எனக்கு புதிய அனுபவமாக இருந்தன. ஏன்னென்றால் அது தான் நான் பிறந்து வளர்ந்து முதலாவதாக விமானத்தில் பயணம் செய்த நாள்.
இவ்வாறு விமானத்தில் பயணம் செய்யும் போது எப்படி செயற்பட வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவதற்கு முழுக் காரயமாக இருந்த யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய இயக்குனர் தே.தேவானந்   Sir க்கு மலர் தூவி வாழ்த்தினாலும் அது மிகையாகாது.

No comments:

Post a Comment