ஓவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு வாசம் உள்ளன. அது போல ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்புள்ளன. அந்த மொழியின் சிறப்புக்களை எடுத்துக்காட்ட மொழி வளம், இனிமை, தெளிவு, கருத்து, உச்சரிப்புத்தன்மையை என்பன உதவி புரிகின்றது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழிக்கும் வித்தியாசமான சிறப்பியல்புகளை கொடுக்கின்றன. மொழிகள் என்பதற்கு இது தான் என்று சரியாக சுட்டிக்காட்டி வரைவிலக்கணப்படுத்த முடியாது.
இங்கு மொழி பற்றி எண்ணும் போது இன்னுமொரு முக்கிய விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது எழுத்து வடிவம், வரி வடிவம் என்பதாகும். எழுத்து வடிவம் என்பது உடலுக்கு குருதி போன்றது. எழுத்து வடிவம் என்பது உண்மையிலேயே ஒரு மொழிக்கு வலுச் சேர்க்கும் வரை படமாகும். மொழி என்பது சத்தம் மற்றும் ஒலியுடன் மட்டுமே தொடர்புபட்டதாகும். காலாதி காலமாக பேசப்பட்டு வரும் வாய் மொழி மரபானது இன்றும் அவை இலக்கியத்தில் நிலைத்து நிற்பதற்கு வரி வடிவம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தற்போது வழக்கில் இருக்கும் மொழிகள் மற்றும் வழக்கொழிந்து மறைந்து போன மொழிகள் இன்றோ நேற்றோ நாளையோ தோற்றம் பெற்றதோ, பெறப்போகிறதோ அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படிப்படியாக ஒலைச் சுவடிகள்,கற்கள் ஈரச்சுதைகள் என்பவற்றில் எழுதி சிறுகச் சிறுக தோற்றம் பெற்றவையாகும். இந்த ஒவ்வொரு மொழியும் அந்தந்த இடத்து மக்களுடைய கலை, கலாசார, பண்பாட்டிக்கு அமையவே தோற்றம் பெற்றவையாகும். அதாவது ஓரு மொழியை வைத்துக் கொண்டு அந்த மொழி பேசும் மக்களின் பொதுவான இனத்திற்குரிய இயல்பு குணாதிசயங்களை கண்டு பிடிக்கலாம்.
“கவிதை எழுதுபவன் எல்லாம் கவிஞன் ஆகிவிட முடியாது” , “சித்திரம் வரைபவன் எல்லாம் சிற்பியாகி விட முடியாது” அது போல உலகில் பல மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தாலும் துரதிஷ்டவசமாக சில மொழிகளுக்கே எழுத்து வடிவம் இருக்கின்றன. பேச்சு வழக்கில் உள்ள ஒரு மொழியை எழுத்து வழக்கிற்கு மாற்றுவதென்பது சாதாரண விடயமல்ல. இவ்வழக்கில் இருந்து அவற்றை அச்சு வடிவிற்கு கொண்டு வரப்படுமாயின் இன்று பல மொழிகள் அழிந்து போகாமல் இருந்திருக்கும்.
இன்று மனித குலம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒரு மொழியை புதிதாக கண்டு பிடிப்பது என்பது கல்லில் நார் உரிப்பதற்கு சமனாகும். இன்னும் சொல்லப் போனால் மண் புதிரை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமனான விடயமாகும். அதாவது மொழி என்பது செயற்கையாகவே அல்லாமல் இயற்கையாகவே தோற்றம் பெற்றதாகும். இதுவும் மொழிக்குரிய சிறப்பம்சமாகும்.
ஓவ்வொரு மனிதனுக்கும் தாய் எவ்வளவு காட்டாயமானதோ அந்த அளவுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் தாய் மொழி முக்கியமானது. தாய் இருப்பினும் சுற்றத்தரின் உதவியும் தேவை. அப்படி இருந்தால் தான் சமூகத்தில் மனித குலம் பகுத்தறிவு என்ற நிலைக்கு உருப்பெறும். இது போல தாய் மொழியோடு மட்டும் நில்லாது பிற மொழிகளையும் அறிந்திருத்தல் அப்போது தான் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலும் உண்மையான அறிவைப் பெறமுடியும்.
அழிவதில்லை மொழி இது சிலருக்கு புரிவதில்லை. ஒவ்வொருவரின் தாய் மொழி அப்படியே இருக்கும் அதை பேசுவதற்கு யாருமே இருக்கமாட்டார்கள். காரணம் மொழியை யாரும் அழிக்கமுடியாது.
உதாரணமாக, 1) அ(ப்)பி பாசல(ட்)ட யனவா
2) எத்த கத்தா கரன்ன
3) ஒபே நம மொக்கத்த(குமக்த)?
4) மகே நம……..
5) தாத்தா கொய் வெலே எய்த?
6) மம கெதர அட்ட யனவ
7) லஸ்ஸ, மல்லி, நங்கி ……..
இவையெல்லாம் நாம் பாடசாலையில் கற்றுக்கொண்ட சில சிங்கள வசனங்களாகும்.
ஒரு மொழி செம்மொழியாக வேண்டுமானால் ஆயிரம் ஆண்டுகள் தேவை. ஆனால் எமது தாய் மொழியான தமிழ் மொழி நாலாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. இப்பழைமையை புலப்படுத்த இலக்கிய சான்றாதாரங்கள் உள்ளன. உதாரணமாக திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன உள்ளன. இவற்றோ தமிழ் மொழி எந்த மொழிகளிலிருந்தும் தவுவி வராதா மொழியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பிறந்து சிறந்து கொள்வது யதார்த்தம். ஆனால் சிறந்து பிறந்த மொழி என்றால் அது தமிழ் மொழி ஒன்று தான்.
No comments:
Post a Comment