யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கை நெறி மாணவர்களுக்கான விசேட கருத்தமர்வு 15.12.2011 அன்று காலை 10 மணிக்கு பேராசிரியர் இரா.சிவச்சந்திரனின் இல்லத்தில் இலங்கை நிர்வாக முறைமை என்னும் தொனிப் பொருளில் இடம்பெற்றது.
இதில் கருத்துரை வழங்கிய பேராசிரியர் சிவச்சந்திரன் குறிப்பிடுகையில் இலங்கையில் பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனம் என்ற இனங்களில்லை. மாறாக சிங்கள தேசியம் தமிழ் தேசியமாகிய இரு இனங்களே உள்ளன. பிரித்தானியரினால் தமிழர்களுக்கான உரிமை சிங்களவரின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழர்களுக்கான உரிமை சிங்களவர்களினால் மறுக்கப்பட்டிருந்தன. இதனால் சிங்கள தேசிய இனம் தமிழர்களை சிறுபான்மை இனமென்றும் சிங்களவரை பெருபான்மை இனமென்றும் வர்க்கித்துக் கொண்டனர். இந்நிலையில் தமிழர்களின் 30 வருட போராட்டம் முடிவடைந்து மீண்டும் மூன்று வருட சமாதான ஒப்பந்தத்தின் மூலம் தமிழர்களுக்கான எந்த வகை உரிமைகளும் வழங்கப்படாத நிலையில் இன்றும் இவர்கள் ஏதிரிகளாக அலைந்து திரிவது கண் கூடு என்று அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் மக்களுக்காக உருவாக்கப்பட்டவர்களே அதிகாரிகள். அதிகாரிகளுக்காக மக்களல்ல என்ற நிலைப்பாட்டை மறந்து அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் கீழ் படித்து செல்வதே இன்று பிரச்சனையாகவுள்ளது. குறிப்பாக அதிகாரிகளின் நிலையை விட அவர்களை உயர்த்தி காண்பிப்பது அவ் அதிகாரிகளுக்கு பெரிதுவாக்க மகிழ்ச்சி. இதனால் ஆமாப் போடும் சமூகம் தலைத்தோங்கி வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகவுள்ளது.
சிங்கள தேசிய இனம் எப்படி இம்மண்ணில் பூர்வீக குடிகளாக சுதந்திரமாக நடமாடுகின்றார்களோ அதே போலவே தமிழர்களும் இருக்க வேண்டும் என்பது தமிழர்களின் பெரும் அவாவாகும். ஆனால் இது தமிழர்களுக்கு 30 வருட காலமாக கேள்விக்குரியாக இருக்கிறது.
சமூகத்தில் அங்காங்கே நடக்கும் சில அசம்பாவிதங்களை குறிப்பாக அதிகாரிகளினால் விடப்படுகின்ற பிழைகள் மக்கள் எதிர்ப்பார்ப்பவை என்பவை தொடர்பாக வருங்கால ஊடகவியலாளராகிய நீங்கள் சமூகத்தை நன்கு கவனித்து தட்டிக் கேட்டு எழுத வேண்டும். அப்போது தான் நானும் சரி நீங்களும் சரி ஒரு மாற்றத்தை கண்டு கொள்ள முடியும் என்றார்.
இந் நிகழ்வில் விரிவுரையாளரும் யாழ்.தினக்குரல் உதவி ஆசிரியர் அ. தபேஸ்வரனும் 30 ஊடக மாணவர்களும் பங்கு பற்றினார்.
No comments:
Post a Comment