யாழ் செயற்திறன் அரங்க இயக்கத்தின் முன்னெடுப்பில் 02.10.2011 அன்று செயற்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந் தலைமையில் நிகழ்ந்த “நாடக பயிற்சிப் பட்டறை” பேராசிரியர் அ.மங்கை நடாத்தினார்.
இவ் பயிற்சி பட்டறைக்கு “பழம் திண்டு கொட்டையை போடுவது” போல பல நாடக ஆய்வாலர்கள் நடுவே நான் நாடகம் சார்ந்த விடயங்கள் எதுவுமே தெரியாதவளாக இக்களத்திலே நின்றேன். நாடகம் என்றால் என்ன என்று தெரியாத நான் இயக்குனர் தே.தேவானந் அவர்களின் ஆரம்ப பயிற்சி மூலம் “பழக பழக பாலும் புளிக்கும்” போல் எனது நாடக அனுபவமும் எனக்கு கை கொடுத்தது.
சிறுவர் முதல் பெரியோர் வரை விளையாட்டு என்பது யாவர்க்கும் பிடித்த ஒன்று. நான் நினைத்தேன் விளையாட்டை மைதானத்தில் மட்டும் தான் விளையாட முடியும் என்று ஆனால் பேராசிரியர் அ. மங்கை சொன்னார் நாங்கள் எல்லோரும் விளையாடுவோம் வட்டம் கூடுங்கள் என்றார். அப்போது தான் நான் உணர்ந்தேன் நாடகத்திலும் விளையாட்டுகள் இருக்கு என்று. ஆடும் வீடும், சங்கிலி புங்கிலி, கைத்தாளம், நொண்டியோ குதிரையோ ஆகிய பல விளையாட்டின் மூலம் எனக்கு சந்தோசம் கிடைத்தது.
சா+பாடு= சாப்பாடு. சாவின் பக்கம் கொண்டு செல்வது சாப்பாடு. நான் விரதத்தின் மத்தியிலும் இந்த பயிற்சி பட்டறையில் இணைந்து கொண்டேன். ஆனால் எனக்கு நான் விரதத்தில் இருக்கிறேன் என்ற ஒரு உணர்வு கூட இருக்க வில்லை. அந்தளவுக்கு பேராசிரியர் அ. மங்கையின் நாடக பயிற்சி சிறுபிள்ளைக்கு விளையாட்டு மாதிரி எனக்கு இருந்தது.
விளையாட்டுடன் ஆரம்பமான நாடகப் பயிற்சியில் முகபாவனை உத்தி கையாளப்பட்டது. வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மனநிலையில் காணப்படுவார்கள். இத்தகைய மன நிலையை அரங்கில் போலச் செய்ய முகபாவனை உதவுகிறது. அதாவது சோகமாக, கோபமாக, விரக்தியாக, மகிழ்ச்சியாக இருந்தால் எப்படி முகத்தை வைத்திருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். எனக்கு முதல் தடவையாக அப்படி நடிப்பதற்கு வெட்கமாக இருந்தது. பேராசிரியர் அ.மங்கை அவர்களின் நடிப்பதைப் பார்க்க எனக்கும் அவரைப் போல் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு நான் வெட்கத்தை விட்டு நடித்தேன். இந்த பயிற்சி மூலம் எனக்கு வெட்கம் என்றால் என்வென்று தெரியாமலே போய் விட்டது. அந்தளவுக்கு செயற்திறன் அரங்க இயக்கம் எனக்கு நாடகத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மூன்று நாள் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில் நாடகத்தில் ஆர்வமில்லாத எனக்கு முதல் நாள் பயிற்சிப்பட்டறையில் தே.தேவானந் அவர்களின் நகைச்சுவையோடு நடிப்பைக் கண்டு எனக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மேலும் ஏற்பட்டது.
நாடக பயிற்சியின் போது பேராசிரியர் அ.மங்கை சொன்ன உங்களின் வீட்டிலுள்ள பாவணைக்கு பாவிக்கப்படும் ஏதாவது ஒரு பொருளை நாளைக்கு கொன்டு வர சொன்னார். அப்போது அவர் எதற்காக பொருட்களை கொண்டு வரச் சொல்லுறார் என்று தெரியவில்லை. ஆனால் இதற்கு விடை அடுத்த நாள் தான் எனக்கு தெரிந்தது.
அடுத்த நாள் நாங்கள் கொண்டு போன பொருட்களை வேறு ஒரு பொருளாக கருதி அதை பயன்படுத்தி நடித்துக் காட்டச் சொன்னார். அன்று தான் எனக்கு தெரிந்தது பொருட்களை வைத்து காட்சிகளை உருவாக்கலாம் என்று. எனக்கோ பொருளை வைத்து எப்படி நாடகம் செய்வது என்று தெரியாது. நான் என்னென்டு செய்யப் போறேன் என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் பேராசிரியர் அவர்கள் ஒரு பொருளை வைத்து இப்படித் தான் நடிக்க வேண்டும் என்று செய்து காட்டினார். அதற்கு பிறகு எனக்கு பயம் தெளிந்து விட்டது. அன்று எனக்கு மறக்க முடியாத நாள். ஓரு பொருளை வைத்து நாடகம் நடிக்கும் முறைமை எனக்கும் தெரியும் என்ற சந்தோசம் எனக்கும் ஏற்பட்டது.
நாடகத்தில் காட்சியமைப்பு என்பது பிரதான விடயமாகும். இந்த காட்சியமைப்பு ஒவ்வொன்றும் நாடகத்தில் கதை பேசும். அது போல நாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் மூலம் ஒவ்வொரு வகையான காட்சியமைப்புக்களை உருவாக்கினோம். இதற்கமைய இரண்டு சொல்லை வைத்து அவற்றை கருவாக்கி அவற்றை நாடகமாக்கி வெளிப்படுத்தலாம் என்பது நாடகப் பிரியர்கள் தொட்டு எனக்கும் அறியப்படாத ஒரு விடயம். அதாவது “சொல்லட்டோ…….., வேண்டாம்.” என்ற இரண்டு சொற்களை வைத்து எங்களை குழுவாக பிரித்து 5 நிமிடத்திற்குள் நடிகச் சொன்னார். நான் 5ஆவது குழு என்னுடன் 6சக நடிகர்கள் இருந்தார்கள். எங்களுக்கு இந்த இரண்டு சொற்களையும் வைத்து எப்படி நடிப்பது என்று தெரியாது பல கோணத்தில் சிந்தித்து குழம்பிய வண்ணம் இருந்தோம். எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிவடைந்தது. முதலாவது குழு தங்களுடைய 5நிமிட ஆற்றுகையை நிகழ்த்தினர். விறுவிறுப்பாக போய் கொன்டிருந்த கள பயிற்சி இடையிலேயே சரிந்து விடுமோ என்று நினைக்கவே 1ஆவது குழு தனது அளிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதை பார்த்தவுடன் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற விடயத்தை புரிந்து கொண்டேன்.
இவ் ஆற்றுகையை கண்டு களித்த யாழ். பல்கலைகழக விரிவுரையாளர் றதிதரன் அவர்கள் “ஒரு பயிற்சிப் பட்டறையிலேயே பங்குபற்றுகின்ற அனைவரும் நடிகர்களாக தொழிற்படுவதில்லை. ஆனால் இங்கு நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறையில் பங்கு பற்றிய அனைவருக்கும் நடிகர்களாக தொழிற்பட்டதை இங்கு தான் நான் முதல் முதலாக காண்கிறேன்” என்று றதிதரன் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
இப் பயிற்சிப்பட்டறையின் இறுதி நாள் அன்று குழந்தை ம.சண்முகலிங்கம், யாழ்.பல்கலைகழக நாடக விரிவுரையாளர் றதிதரன், ஈழத்து இசையமைப்பாளர் றோபோட், நெறியாளர் அரசு, யாழ்.பல்கலைகழக நாடக மாணவர்கள், உதயன் செய்தி ஆசிரியர் தே. பிரேம்நாத் மற்றும் நாடக ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவர்கள் ஒவ்வொருவரையும் கண்டதே எனக்கு முதல் அனுபவம்.
“உலகமே ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் ஒரு நடிகர்கள்” என்பது மகா கவி வில்லியம் சேக்ஸ்பியர் அன்று கூறி விட்ட கூற்றை நான் வீடு சென்று யோசித்துப் பார்த்தேன் அப்போது புரிந்து கொண்டு ஓ ஓகோ…….. அம்மா, அப்பா, கணவன், மனைவி, பிள்ளைகள், அயலவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்…… ஆகிய எல்லாமே உலக அரங்கில் பாத்திரங்கள் இவை யாவும் நாடகத்தில் போலச் செய்யப்படுகின்றது.
நாளை நான் என்ன பாத்திரம்? ஏன்ற குறிக்கோளை வைத்து வாழ வேண்டும் என்ற தூண்டல், துலங்கல், விளைவு காட்டிகள் ஆகியவற்றை இப் பயிற்சிப்பட்டறையில் அனுபவமாக கிடைத்தது. வாழ நினைத்தால் வாழலாம் வழியாய் இல்லை இப் பூமியில் என்ற தாரக மந்திர அனுபவத்தோடு செயற்திறன் அரங்க இயக்குணரும் யாழ். பல்கலைகழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய இயக்குணருக்கும் நன்றிகளைக் கூறிக் கொள்கின்றேன் என் அனுபவத்திற்காய்.
No comments:
Post a Comment