aho; Gifapuj epiya cile;j fl;llk;
ntl;lg;gl;l epiyapy; ,Uf;Fk; jz;lthsk;
uapy;Nt rkpQ;iQ tpsf;F
பயணிகளின் கடவை
யாழ் மாநகரப்பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தின் கட்டடங்கள் முழுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளன.
யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள பின்பும் யாழ் புகையிரத நிலையம் திருத்தப்படாத நிலையில் உள்ளது. இப்புனரமைப்புப் பணிக்காக பிரான்ஸ் அரசாங்கம் 35 மில்லியம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. தற்போது கொழும்பிலிருந்து மற்றும் ஏனைய பகுதியிலிருந்து வடபகுதிக்கு வரும் ரயில்கள் ஒமந்தை வரையே வந்து செல்கின்றது.
வடபகுதிக்கான புகையிரத சேவைகள் சீர் செய்யப்படுவதற்கான திட்டம் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையை காங்கேசந்துறை வரை அமைத்துக் கொடுப்பதற்கான பொறுப்பை முழுமையாக இந்தியா அரசாங்கம் எடுத்துள்ளது.
மூன்று கட்டமாக திட்டமிடப்பட்டுள்ள ரயில் பாதை மற்றும் அமைப்பு பணிகளும் ஒமந்தை வரையான பாதை மற்றும் கட்ட அமைப்புக்கான முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
இரண்டாம் கட்டமாக ஒமந்தையில் இருந்து பளை வரையான பாதை அமைக்கப்படவுள்ளது.
மூன்றாம் கட்டமாக பளையிலிருந்து காங்கேசந்துறை வரையான பாதை அமைக்கப்படும்.
இப்பணிகள் முழுமையாக நிறைவு பெற மேலும் சில ஆண்டுகள் தேவைப்படும்.
No comments:
Post a Comment