நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கோயிலை சுற்றியுள்ள பகுதியில் வீதியெங்கும் அலங்கரிப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் நான்காம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் திருவிழா நடைபெற்று 26ஆம் திகதி சப்பறத்திருவிழாவும் 27ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 28அம் திகதி தீர்த்தத்திரவிழாவும் நடைபெறும் இதனை முன்னிட்டு நல்லூர் பிரதேசத்தை சுற்றியுள்ள வீதியெங்கும் தகரப்பந்தல்களை மக்கள் அமைத்து வருகின்றனர்.
இதேவேளை நல்லூர் கந்தசுவாமி கோயிலின் தெற்குப்பகுதியில் புனரமைக்கப்படுகின்ற கோபுரம் பழனி ஆண்டவருக்கு முக்கியத்துவம் கொடுத்து தனியாக சுவாமி வைக்கப்பட்டு அதில் கோபுரம் அமைக்கப்படுகின்றது. தற்போது அந்தக்கோபுரத்தின் வேலைப்பணிகள் முடிவடைந்து வருகின்றது .
கோயில் புனரமைப்பு பணிகள் அனைத்தும் திருவிழாவிற்கு முன் முடிவடைய வேண்டும் என்ற நோக்கில் விரைவாகப் பணிகளை அமைத்து வருகின்றனர். மற்றும் வியாபாரிகள் பல இடங்களில் இருந்து வருகை தந்து தமக்கென தற்காலிக கடைகளை அமைத்து திருவிழா முடியும் வரை அங்கேயே தங்கியிருந்து விற்பனைக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து வருகின்றனர்.