.பைசிக்கிள் தீஃவ்ஸ் என்ற திரைப்படம் இத்தாலிய மொழியில் வெளிவந்த கலைப்படமாகும். இத்திரைப்படத்தின் இயக்குனர் வித்தோரியொ டி சில்காவின் இயக்கத்தில் வெளிவந்தன. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கியுசெப்பெ அமெதோ, கதை லூகி பர்த்தோலினி சீசர் சவார்த்தி, நடிப்பு லம்பேர்டோ மக்கியோரானி என்சோ ஸ்டையோலா உள்ளனர். நவம்பர் 24 1948ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
வறுமை கொடிது என்று பாடுகிறார் அவ்வையார் அதிலும் கொடியது இளமையில் வறுமை என்கிறார் மீண்டும். ஒரு இளம் வறுமையின் கொடுமையை வெளிக்கொணரும் வகையில் இத்திரைப்படம் காணப்படுகிறது. வறுமை என்றால் என்ன அதை எவ்வாறு எதிர் கொள்ளுகிறார்கள் என்று அவ் எதிர்கொள்ளலில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்றும் அறிய முடிகிறது.வாழ்கையில் எவ்வளவு மனிதர்கள் வறுமையின் கொடுமையில் அகப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கும் இத்திரைப்படத்தின் விழிப்புனர்வு இத்திரைப்படத்தினூடாக அறிய வாய்ப்பளித்துள்ளது.
திரைப்படத்தின் கதையின் சுருக்கத்தை நோக்கும் போது அந்தோனியாவின் குடும்பம் மனைவி, 2 பிள்ளைகளை கொண்ட வறுமையான குடும்பமாகும். வேலையில்லாத அந்தோனியர் ரிச்சி வேலை தேடிக் கொண்டிருக்கிறார் பல பேர் வேலையை காத்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு அதிகாரி அந்தோனியாவின் பெயரை கூப்பிட்டு போஸ்டர் ஒட்டும் வேலை இருக்கிறது அதற்கு சைக்கிள் தேவை என்கிறார். 2ஆம் உலக யுத்தத்தின் காலப்பகுதியில் இத்தாலி நாட்டில் வாழ்ந்த அந்தோனியோ வேலை செய்யும் நிறுவனத்தின் சட்டத்தின் படி மிதி வண்டி வைத்திருத்தல் அவசியமாகும். ஆனால் அவனோ என்னிடம் சைக்கிள் இல்லை என்கிறான் அப்படியானால் அந்த வேலை உனக்கு இல்லை என்றார் அதிகாரி. சுற்றியிருந்தவர்கள் என்னிடம் சைக்கிள் இருக்கிறது என்று சென்னார்கள் இதை கேட்ட அந்தோனியார் என்னிடமும் சைக்கிள் இருக்கிறது என்று பொய் சொல்லி அந்த உத்தரவை வாங்கிக்கொண்டான். அந்தோனியாவின் மனைவி தனக்கு சீதனமாக வந்த பொருட்களை எல்லாம் விற்று கணவருக்கு மிதி வண்டி ஒன்றை வேண்டி கொடுத்தார். அந்த வண்டியினை அவனது மகன் ஆசையோடு தொட்டு பார்த்தான். இன்னொரு குழந்தை கைக் குழந்தை. காலையில் தான் வேலை செய்ய வேண்டிய இடத்திற்கு போகுறான் அங்கே அடுத்த நாள் வேலைக்கு வர சொன்னது.
அடுத்த நாள் மகன் ப்ருனோவையும் கூட்டக் கொண்டு போய் மகனை வேலைக்கு விட்டு விட்டு தான் அலுவலகத்திற்கு அங்கே சக பணியாட்களுடன் சுவர் ஏணி பசை மற்றும் போஸ்டரோடு கிளம்புகிறார் அந்தோனியோ. ஒருவன் எப்படி போஸ்டரை ஒட்டுவது என சொல்லி விட்டுக் கிளம்ப தன் சைக்கிளோடு தனியாக போஸ்டர் ஒட்டக் கிளம்புகிறான். அவர் போஸ்ரர் ஒட்டிக்கொண்டுடிருக்கும் வேளையில் அந்த மிதி வண்டி திருடப்பட்டுள்ளது. கள்ளனுக்கு பின் சென்றும் பிடிக்க முடியவில்லை.இறுதியில் பொலீஸ்ரருக்கு புகார் கொடுத்தார். எப்போது என் சைக்கிளை மீட்டு தருவீங்கள் என்று பொலீஸாரிடம் கேட்ட போது நாங்கள் தேட மாட்டோம் எங்கையாவது உன் சைக்கிளை கண்டால் எங்களுக்கு செல்லு உன் புகாரின் பெயரில் மீட்டு தருகிறோம் என்றார். பின் மகனை கூட்டிக்கொண்டு வீட்டில் விட்டு விட்டு தன் நண்பனை பார்க்க செல்கிறான். அவனிடம் கூற நண்பன் காலையில் பாhக்;கலாம் என கூறுகிறான். அங்கே வரும் மனைவியை நண்பன் ஆறுதல் சொல்லி அனுப்புகிறான். இந்த மிதி வண்டியை தேடி அந்தோனியோவும் அவரது மகனும் மனைவியும், நண்பனும் எல்லா இடங்களுக்கும் சென்று கிடைக்க பெற வில்லை. நண்பன் கிளம்ப அந்தோனியோவும், மகனும் தனியாக சைக்கிள் தேடி செல்கிறார்கள்.
அப்போது சைக்கிள் திருடனை கிழவனுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கிறான். அநத திருடன் கிளம்ப பின்னால் ஒடியும் அவனை பிடிக்க முடிய வில்லை அவனால். திரும்பி வந்து கிழவனை கேட்க அவனும் ஒன்றும் சொல்ல வில்லை. ஆந்த கிழவன் பின் இருவரும் செல்லிறார்கள். அந்த கிழவன் ஒரு சர்ச்சுக்குச் செல்ல இருவரும் அங்கே போகிறார்கள். அங்கு பிரார்தனை முடிந்து உணவருந்த உணவுகளும்,சூப் வகைகளும் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிழவன் அந்த திருடன் இருக்கும் இடத்தை சொல்லி விட்டு தப்பி ஒடுகிறான். குpழவனை தேடி இருவரும் வெளியே வர ப்ருனோ ஏன் நாம் சூப் சாப்பிடக் கூடாது என கேட்க அந்தோனியோ அவனை கோபத்தில் அறைந்து விடுகிறான்.மகன் அழுது கொண்டு அம்மாவிடம் வொல்லுகிறேன் எனத் தேம்பி அழுகிறான். பின் மகனை ஒரு ஆற்றங்கரையில் இருக்க சொல்லி விட்டு அந்த கிழவனை தேடி செல்லிறான். கொஞ்ச நேரம் கழிந்து ஒரு சிறுவன் ஆற்றில் விழுந்து விட்டதாக கூக்குரல்கள் திரும்ப வரும் அந்தோனியோ அது தனது மகனல்ல என அறிந்து சந்தோசப்பட்டான்.
பின் மகனுக்கு உணவு கொடுத்து சாப்பிட்ட பிறகு அந்த திருடன் போவதைப் பார்த்து அவன் பின் ஒடுகிறான். அவன் இருக்கும் இடத்தில் பலர் கூடி இவன் நல்லவன் நேர்மையானவன் என சொல்லி அந்தோனியோவை அடிக்க வருகிறார்கள். மகன் பொலீஸ்சாரை கூட்டி வர பொலீஸ்சாரால் திருடனை பிடிக்க முடிய வில்லை. புpன் மகனை அனுப்பி விட்டு அவன் ஒரு மிதி வண்டியைத் திருட நினைத்து திருடவும் சென்றான் ஆனால் அந்த மிதி வண்டிக்கு சொந்தக்காரன் அதனை பார்த்தும் மன்னித்து விடுகிறான். வறுமையின் சோதனை இந்த படத்தின் மூலம் அறியப்படுகின்றது.

No comments:
Post a Comment