Monday, February 21, 2011

இதயத்திருடி

சிவந்த மேனி…..
உள்ளத்தை கவரும் விழிகள்….
மென்மையான கன்னங்கள்…
அழகான உதடுகள்…
அடடா என்ன அழகு!
வெறும் வார்த்தைகளால் அவளை
வர்ணிக்க முடியவில்லை
எதிர்பாராமல் எம் விழிகள்
உரசிக்கொண்ட நொடிதனில்
உந்தலில் தனை சூடிக்கொள்ளும்
ஆசையை மனதில் விதைத்து விட்டாள்
யாருக்கும் தெரியாமல் அவள் அருகில் நான்
அங்கு அவளை சுற்றி காவலர்கள்
தன் காந்த விழிகளினால்
இத்தனை நாட்களால்
இரும்பாக்கி வைத்திருந்த மனதை
களவாட தூண்ட விட்ட திருடி
அந்த ரோஜாப்பூ.